தமிழ்நாடு

tamil nadu

காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் - உதய்பூர் சென்ற ராகுலுக்கு உற்சாக வரவேற்பு

By

Published : May 13, 2022, 12:19 PM IST

காங்கிரஸை வெற்றி பாதைக்கு கடத்த ராகுல் புதிய வீயூகம்- உதய்பூரில் ஆலோசனைக் கூட்டம்

ராஜஸ்தான் மாநிலம உதய்பூரில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக்கூட்டத்திற்கு பங்கேற்க சென்ற ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உதய்பூர் (ராஜஸ்தான்):காங்கிரஸ் கட்சியின் சார்பாக உதய்பூரில் மூன்று நாட்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி உதய்பூர் வந்தடைந்தார். அவருக்கு அங்கு ராஜஸ்தான் கலாச்சார முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பில் அம்மாநில முதலமைச்சர் அசோக் கியோல்ட் இருந்தார். மேலும் காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் உடன் இருந்தனர்.

காங்கிரஸின் மூன்று நாள் ஆலோசனைக் கூட்டம்(சிந்தன் சிவிர்) இன்று (மே 13) தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் விவசாயிகள் பிரச்சனை, பொருளாதாரம், அமைப்பு, இளைஞர்கள் மற்றும் சமூக நீதிக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது. மேலும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூட்டத்தில் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா. " இந்தியாவையும், மக்களையும் ஒடுக்குமுறை, பாகுபாடு, மதவெறி மற்றும் பிரித்து ஆட்சி செய்யும் கொள்கை ஆகியவற்றிலிருந்து விடுவிப்பதற்கான போராட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தயாராக இருக்கும் என தெரிவித்தார்.

கடந்த கால காங்கிரஸின் தோல்விகள் மற்றும் 2024 இல் வரக்கூடிய லோக்சபா தேர்தலில் காங்கிரஸின் பங்களிப்பு குறித்து ஆலோசனை நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க:பழங்குடியினரின் வளங்களைப் பறித்து பணக்காரர்களுக்கு கொடுக்கிறது பாஜக அரசு - ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details