தமிழ்நாடு

tamil nadu

'மழை வெள்ள நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்கப்படும்'

By

Published : Nov 23, 2021, 6:27 AM IST

வெள்ளச் சேதங்கள் குறித்து ஆலோசனை

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிவப்பு அட்டை குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே ரூ.5000 அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மழை வெள்ள நிவாரணமாக மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

புதுச்சேரி: புதுச்சேரியில் மழை, வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வுசெய்வதற்காக மத்திய உள் துறை அமைச்சக இணைச் செயலர் ராஜிவ் சர்மா தலைமையிலான நான்கு பேர் கொண்ட மத்திய குழுவினர் புதுச்சேரி வந்தனர்.

இதனையடுத்து அக்குழுவினர் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் அஸ்வனி குமார், அரசுத் துறை அலுவலர்களுடன் புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

வெள்ளச் சேதங்கள் குறித்து ஆலோசனை

இதனைத் தொடர்ந்து இக்குழுவினர் முதலமைச்சர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசையை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

வெள்ளச் சேதங்கள் குறித்து ஆலோசனை

மத்திய குழுவினர், இன்று (நவம்பர் 23) காலை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள், நீர்நிலைகள், குடியிருப்புப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.

தமிழிசையைச் சந்தித்து ஆலோசனை

மேலும் நிவாரணம் கேட்கப்படும்

மத்திய குழுவினருடன் ஆலோசனைக்குப் பின்பு ரங்கசாமி செய்தியாளரைச் சந்தித்தார், புதுச்சேரியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக 7 ஆயிரம் ஏக்கர் பயிர்நிலங்கள் பாதிக்கப்பட்டதாகவும், பல்வேறு வீடுகள் சேதம் அடைந்ததாகவும் கூறினார்.

மழை சேதம் குறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளதாகவும், மத்திய அரசிடம் 300 கோடி இடைக்கால நிவாரணம் கேட்டுள்ளதாகவும், மத்திய குழுவினர் ஆய்வுசெய்த பின்பு மேலும் நிவாரணம் கேட்கப்படும் என்றும் தெரிவித்தார்.

வெள்ளச் சேதங்கள் குறித்து ஆலோசனை
மேலும், "இதேபோன்று மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிவப்பு அட்டை குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே ரூ.5000 அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மழை வெள்ள நிவாரணமாக மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்கப்படும்" என ரங்கசாமி தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details