தமிழ்நாடு

tamil nadu

குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை வழங்கும் திட்டம் தொடங்கி வைப்பு

By

Published : Nov 29, 2021, 6:48 PM IST

முதலமைச்சர் ரங்கசாமி

குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசியும் 2 கிலோ சர்க்கரையும் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கிவைத்தார்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசி, இரண்டு கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று (நவ.29) முதலமைச்சர் ரங்கசாமி திலாசுப்பேட்டை காளி கோயில் அருகில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசியும் இரண்டு கிலோ சர்க்கரையும் வழங்கி திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

முதலமைச்சர் ரங்கசாமி

இந்நிகழ்ச்சியில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார், அரசு கொறடா ஆறுமுகம், சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ், துறைச் செயலர் உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:உங்கள் அன்பிற்குள் நான் அடங்கி மகிழ்கிறேன் - நடிகர் சிம்பு உருக்கம்

ABOUT THE AUTHOR

...view details