தமிழ்நாடு

tamil nadu

புதுச்சேரியில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்!

By

Published : Oct 8, 2021, 7:57 PM IST

புதுச்சேரியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான, மறு கால அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 2,7 மற்றும் 13ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல்
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல்

புதுச்சேரி:புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தல் நடத்த கடந்த 22ஆம் தேதி தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியிட்டது. இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பில் குளறுபடிகள் உள்ளதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கு விசாரணையால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. மேலும் ஐந்து தினங்களுக்குள் புதிய கால அட்டவணையை வெளியிடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, புதிய தேர்தல் நடத்துவதற்கான கால அட்டவணையைப் புதுச்சேரி தேர்தல் ஆணையம் இன்று (அக்.8) வெளியிட்டுள்ளது.

அதன்படி வருகின்ற நவம்பர் 02,07,13ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் 1,149 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல்
வேட்பு மனுத்தாக்கல் வேட்புமனு தாக்கல் கடைசி நாள் வேட்புமனு பரிசீலனை வேட்புமனுக்களை திரும்பப் பெறுதல் தேர்தல் நாள்
முதல்கட்ட தேர்தல்
அக்டோபர் 11 அக்டோபர் 18 அக்டோபர் 20 அக்டோபர் 22 நவம்பர் 2
இரண்டாம் கட்ட தேர்தல் அக்டோபர் 15 அக்டோபர் 22 அக்டோபர் 25 அக்டோபர் 27 நவம்பர் 7
மூன்றாம் கட்டத் தேர்தல்
அக்டோபர் 22 அக்டோபர் 29 அக்டோபர் 30 நவம்பர் 2 நவம்பர் 13

மூன்று கட்டத்தேர்தலுக்கும் வாக்குப்பதிவு முடிந்த பின், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 17ஆம் தேதியன்று நடைபெறும்.

தேர்தல் நாளன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும்; மாலை 5 மணி முதல் 6 மணி வரை, கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக, புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: COA பாடத்திட்டத்தை இணையத்தில் வெளியிடக்கோரிய மனு - முடிவு எடுக்க தொழில் நுட்பக் கல்வி இயக்கக ஆணையருக்கு உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details