தமிழ்நாடு

tamil nadu

அம்பேத்கர் நினைவு நாள்: ராம்நாத், மோடி மரியாதை

By

Published : Dec 6, 2021, 9:34 AM IST

Updated : Dec 6, 2021, 9:51 AM IST

சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு நாள் இன்று (டிசம்பர் 6) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அம்பேத்கர் நினைவு நாள்
அம்பேத்கர் நினைவு நாள்

இந்திய தேசத்தின் சட்ட வடிவமைப்பாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு நாளையொட்டி ராம்நாத் கோவிந்த், வெங்கையா நாயுடு, நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், அவரது உருவப்படத்திற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் மலர்த்தூவி மரியாதை செய்தனர்.

அம்பேத்கர் நினைவு நாள்

டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் பொதுவாக பாபாசாகேப் அம்பேத்கர் என அறியப்படுகிறார். இவர் 1956 டிசம்பர் 6 அன்று மறைந்தார். இவர் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பிறந்தார். இவரது பெற்றோருக்கு 14ஆவது மற்றும் கடைசி பிள்ளை ஆவார்.

திருமணத்தின்போது அம்பேத்கரின் முதல் மனைவிக்கு வயது வெறும் 9 தான். இவர் பொருளாதார வல்லுநராகவும், கல்வியாளராகவும் இருந்தவர்.

அண்ணல் அம்பேத்கர் 1947 ஆகஸ்ட் 29 அன்று சுதந்திர இந்தியாவின் அரசியலைப்பு வரைவுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். நாடு சுதந்திரம் பெற்றபின் இந்தியாவின் சட்ட அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

பட்டியலின மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களைத் தட்டிக் கேட்கும் வகையில் 'எக்ஸ்குளுடட் இந்தியா', 'மூக் நாயக்', 'ஜந்தா' உள்ளிட்ட இதழ்களைத் தொடங்கி நடத்தினார்.

இதையும் படிங்க: பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில் 6000 காவலர்கள் குவிப்பு

Last Updated : Dec 6, 2021, 9:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details