டெல்லி: விநாயகர் சதுர்த்தி விழா இன்று (செப். 19) வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தனது எகஸ் தளத்தில், "புனிதமான விநாயகர் சதுர்த்தி திருநாளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இந்த புனித நாளில், ஸ்ரீ விநாயகப் பெருமானின் பிறந்த நாள் மிகுந்த பக்தியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.
விக்னஹர்த-கணேஷ் ஜி அனைத்து தடைகளையும் நீக்கி, வளர்ந்த நாட்டைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. கணபதி பாப்பா மோரியா!" என்று பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் நாட்டு மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். அந்த பதிவில், "நாடு முழுவதும் உள்ள குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். விக்னஹர்த-விநாயகர் வழிபாட்டுடன் தொடர்புடைய இந்த புனித திருவிழா உங்கள் அனைவரின் வாழ்விலும் நல்ல அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும். கணபதி பப்பா மோரியா!" என குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க:Women's Reservation : மகளிர் இடஒதுக்கீடு மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!