தமிழ்நாடு

tamil nadu

கரோனா பரவல்: இன்று  தொடர் ஆலோசனையில் பிரதமர் மோடி!

By

Published : Apr 23, 2021, 6:56 AM IST

டெல்லி: கரோனா தொற்று அதிகரித்து வருவதால், உயர்மட்ட குழு, மாநில முதலமைச்சர்கள் சந்திப்பு எனத் தொடர் ஆலோசனையில் பிரதமர் மோடி இன்று (ஏப்ரல்.23) ஈடுபடவுள்ளார்

PM Modi
பிரதமர் மோடி

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில், கரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று, பிரதமர் நரேந்திர மோடி கரோனா தடுப்பு பணி குறித்து உயர்மட்ட குழுவினருடன் காலை 9 மணியளவில் ஆலோசிக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து, கரோனா பரவல் அதிகமுள்ள மாநில முதலமைச்சர்களுடன் கலந்து பேசுகிறார். பின்னர், 12.30 மணியளவில் முன்னணி ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

முன்னதாக இன்று மேற்கு வங்கத்தில் பரப்புரை மேற்கொள்ள மோடி திட்டமிட்டிருந்தார். ஆனால், கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பரப்புரை நிகழ்வை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'ஆறு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு' டெல்லி துணை முதலமைச்சர் கவலை!

ABOUT THE AUTHOR

...view details