தமிழ்நாடு

tamil nadu

மகாத்மா காந்தி 75வது நினைவு தினம்: பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள் மரியாதை!

By

Published : Jan 30, 2023, 10:58 AM IST

மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் மரியாதை செலுத்தும் விதமாக ட்விட்டரில் அவரது வாழ்க்கையை நினைவு கூர்ந்துள்ளனர்.

மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினம்: பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள் மரியாதை!
மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினம்: பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள் மரியாதை!

டெல்லி: மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினம், இன்று (ஜன.30) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நான் மகாத்மா காந்தியின் நினைவு நாளில், அவரது ஆழ்ந்த எண்ணங்களை நினைவுகூர்கிறேன்.

நாட்டின் சேவையில் தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தியாகங்கள் ஒருபோதும் மறக்கப்படாது. மேலும் வளர்ந்த இந்தியாவுக்காக நாம் உழைக்க வேண்டும் என்ற உறுதியை வலுப்பெற வைக்கும்” என தெரிவித்துள்ளார்.

அதேபோல் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, “நாட்டில் உள்ள அனைவரும் அன்போடு வாழ வேண்டும், அனைத்து மதத்தினரும் சமமாக நடத்தப்பட வேண்டும் மற்றும் உண்மைக்காக போராட வேண்டும் என மகாத்மா காந்தி கூறியுள்ளார். அவரது நினைவு நாளில், தேசத்தந்தைக்கு நான் தலை வணங்குகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மகாத்மா காந்தியின் நினைவு நாளில், அன்னாருக்கு லட்சக்கணக்கான வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். மகாத்மா காந்தியின் தூய்மை, பூர்வீகம் மற்றும் சுயமொழி போன்ற கருத்துகளை ஏற்றுக்கொள்வதே அவருக்கு செய்யும் உண்மையான மரியாதை ஆகும்” என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “மகாத்மா காந்தியின் நினைவு நாளில், பெருமை மிகுந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலக அமைதிக்காக காந்தி மேற்கொண்ட பயணங்கள், இன்றும் நம்மை நினைக்க வைக்கின்றன. அவரது தூண்டுதலால், இன்று நாடு புதுமையான மற்றும் சுய முன்னேற்றத்தை அடைந்து கொண்டிருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

மேலும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உண்மை மற்றும் அகிம்சை மூலம் அமைதியையும் நாட்டு நலத்தையும் முன்னெடுத்த தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு, அவரது நினைவு நாளில் தலை வணங்குகிறேன். உங்களது தத்துவார்த்த வாழ்க்கை மற்றும் பல்வேறு சிந்தனைகள் நாட்டிற்கும் சமூகத்துக்கும் ஒரு தூண்டுதலாக உள்ளது” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ஒடிசா அமைச்சர் மறைவையொட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

ABOUT THE AUTHOR

...view details