தமிழ்நாடு

tamil nadu

ராணுவ தினம்: வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

By

Published : Jan 15, 2022, 10:34 AM IST

ராணுவ தினத்தை முன்னிட்டு, ராணுவ வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

PM Modi extends wishes on the occasion of Army Day  Pm Modi wishes for army day  army day  ராணுவ தினம்  பிரதமர் மோடி ராணுவ தின வாழ்த்து  ராணுவ தின வாழ்த்து
மோடி

டெல்லி: இந்தியா முழுவதும் இன்று (ஜன 15) ராணுவ தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராணுவ தினத்தை முன்னிட்டு, நமது துணிச்சலான, மரியாதைக்குரிய வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்.

இந்திய ராணுவம் அதன் துணிச்சலுக்கும், தொழில்முறைக்கும் பெயர் பெற்றது. தேசப் பாதுகாப்பிற்காக இந்திய ராணுவத்தின் விலைமதிப்பற்ற பங்களிப்பிற்கு வார்த்தைகளால் வாழ்த்து சொல்ல முடியாது” என பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து “இந்திய ராணுவ வீரர்கள் விரோத நிலப்பரப்புகளில் பணியாற்றுகிறார்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் உட்பட மனிதாபிமான நெருக்கடியின் போது சக குடிமக்களுக்கு உதவுவதில் முன்னணியில் உள்ளனர்.

வெளிநாடுகளிலும் அமைதி காக்கும் பணிகளில் ராணுவத்தின் சிறப்பான பங்களிப்பிற்காக இந்தியா பெருமை கொள்கிறது” எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்கு வானிலையே காரணம் - நீதிமன்ற விசாரணையில் தகவல்

ABOUT THE AUTHOR

...view details