தமிழ்நாடு

tamil nadu

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 40 பைசா குறைப்பு

By

Published : Nov 1, 2022, 9:52 AM IST

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு 40 பைசா குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 40 பைசா குறைப்பு
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 40 பைசா குறைப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு 40 பைசா குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (நவ 1) காலை 6 மணி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.

இதனிடையே கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு முறையே ரூ.102.63 மற்றும் ரூ.94.24 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அதேபோல் டெல்லியில் ரூ.96.72, கொல்கத்தாவில் ரூ.102.03 மற்றும் மும்பையில் ரூ.102.63 என பெட்ரோல் விற்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு கடைசியாக ஏப்ரல் 7ஆம் தேதி விலை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இதுபோன்ற வலியை நான் உணர்ந்தது இல்லை - பிரதமர் மோடி உருக்கம்

ABOUT THE AUTHOR

...view details