தமிழ்நாடு

tamil nadu

பி.வி. சிந்துவுக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு!

By

Published : Aug 2, 2021, 1:53 PM IST

Updated : Aug 2, 2021, 2:03 PM IST

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனைபுரிந்துள்ள வீராங்கனை சிந்துவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி வி சிந்துவுக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு
பி வி சிந்துவுக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு

நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இன்று (ஆக. 2) காலை இரு அவைகளும் கூடிய நிலையில், ஒலிம்பிக்கில் மீண்டும் ஒரு பதக்கம் வென்று சாதனை படைத்த பி.வி. சிந்துவுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் சிந்து நேற்று வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து இரண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை சிந்து பெற்றுள்ளார்.

சிந்துவின் இந்தச் சாதனையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு இருவரும் நாடாளுமன்ற அவைகளில் பாராட்டியுள்ளனர்.

இன்று காலை மக்களவையில் பேசிய ஓம் பிர்லா, "வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைபுரிந்த சிந்துவுக்கு அவையின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு சிந்து உந்துசக்தியாக உள்ளார்" என்றார்.

அதேபோல் வெங்கையா நாயுடு, "டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சிந்துவுக்கு எனது பாராட்டுகள். அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று பெரும் சாதனைபுரிந்துள்ளார் சிந்து" என்றார்.

இதையும் படிங்க:நாட்டிற்காக பதக்கம் வென்றது மட்டற்ற மகிழ்ச்சி - சிந்துவின் தந்தை நெகிழ்ச்சி

Last Updated : Aug 2, 2021, 2:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details