தமிழ்நாடு

tamil nadu

எல்லோருக்கு தடுப்பூசி செலுத்திய பின் கொண்டாடலாம் - சித்தராமய்யா அறிவுரை

By

Published : Oct 22, 2021, 8:45 PM IST

நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இன்னும் 106 கோடி டோஸ்கள் தேவைப்படும் சூழலில் எல்லோருக்கும் தடுப்பூசி செலுத்தியப்பின் அரசு கொண்டாட்டத்தை மேற்கொள்ளலாம் என சித்தராமய்யா கூறியுள்ளார்.

Siddaramaiah
Siddaramaiah

இந்தியாவின் கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் 100 கோடி டோஸ்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த சாதனையை பாஜக அரசு கொண்டாடிவரும் நிலையில், காங்கிரஸ் விமர்சனத்தை முன்வைத்துவருகிறது.

கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமய்யா இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சன கருத்தை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர், "நாட்டின் 29 விழுக்காடு மக்கள் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். 42 கோடி பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

62 கோடி பேருக்கு இதுவரை ஒரு டோஸ் கூட செலுத்தப்படவில்லை. இந்த சூழலில் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இன்னும் 106 கோடி டோஸ்கள் தேவைப்படுகிறது. அமெரிக்காவில் 56 விழுக்காட்டினருக்கும், சீனாவில் 70 விழுக்காட்டினருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியாவில் இந்த எண்ணிக்கை வெறும் 21 விழுக்காடுதான். எனவே பிரதமர் மோடி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய பின் கொண்டாட்டத்தை வைத்துக்கொள்ளலாம்" என்றுள்ளார்.

இதையும் படிங்க:ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள்: சோனியா ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details