தமிழ்நாடு

tamil nadu

Odisha train accident: ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு!

By

Published : Jun 4, 2023, 11:06 AM IST

Etv Bharat

பாலசோர் ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேரில் சென்று நலம் விசாரித்தார்.

ஒடிசா: ஒடிசா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் நிகழ்ந்த ரயில் விபத்து பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 100 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் விபத்துக்கு உள்ளானவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ உபகரணங்களுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்குழுவை ஒடிசாவிற்கு அனுப்பி வைத்திருந்தது மத்திய சுகாதாரத்துறை.

கட்டாக் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் மக்களுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மன்சுக் மாண்டவியா சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள ஒடிசாவிற்கு வருகை தந்துள்ளார். அவருடன் மருத்துவ கழுவினர், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே ஒடிசாவின் பாலசோரில் விபத்து நடந்த இடத்தில் புனரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகத் தென் கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (CPRO), ஆதித்ய குமார் தெரிவித்துள்ளார். விபத்தில் கவிழ்ந்த பெட்டிகள் ஒரு புரம் அகற்றப்பட்டுள்ள நிலையில் மறுபுறம் தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வரும் புதன் கிழமை முதல் பாலசோர் விபத்து நடந்த வழித் தடத்தில் மீண்டும் ரயில்கள் இயக்கப்படும் எனக்கூறியுள்ளார்.

மேலும், பாலசோர் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தோர் இன்று காலை சிறப்பு ரயில் மூலம் சென்னை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு நிலையத்தில் இருந்து சிறப்பு மருத்துவ குழு சிக்கை அளிக்கவும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒருப்பக்கம் இருக்க இன்று காலை ரயில் விபத்து நடந்த இடத்தை முன்னாள் காங்கிரஸ் மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான, அதிர் ரஞ்சன் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் விபத்து நடந்த பிறகு முழுவீச்சில் நடைபெற்று வரும் பணிகளை விபத்து நடைபெறாததற்கு முன்பே செய்திருந்தால் பேர் இழப்புகளை தவிர்த்திருக்கலாம் என மத்திய பாஜக அரசை விமர்சித்தார்.

இது ஒரு பக்கம் இருக்க திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பலர் ரயில் பயணத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் கவாச் திட்டத்தை பாஜக அரசு நடைமுறைப் படுத்தாமல் போனதே இந்த கொடும் விபத்திற்குக் காரணம் எனத் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இது வரை இந்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக தரப்பில் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மக்கள் பாதுகாப்பை கவனிக்கவில்லை; விளம்பரத்திற்கு முக்கியத்துவம்: மத்திய அரசை விளாசும் ஆம் ஆத்மியின் பதக்!

ABOUT THE AUTHOR

...view details