தமிழ்நாடு

tamil nadu

முர்முவை உருவ கேலி செய்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவருக்கு வலுக்கும் எதிர்ப்பு

By

Published : Nov 13, 2022, 9:15 PM IST

மேற்கு வங்க அமைசரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான அகில் கிரி நேற்று (நவ-12) நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை உருவகேலி செய்து கிண்டலடித்ததையடுத்து பல கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Etv Bharatமுர்முவை உருவ கேலி செய்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவருக்கு வலுக்கும் எதிர்ப்பு
Etv Bharatமுர்முவை உருவ கேலி செய்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவருக்கு வலுக்கும் எதிர்ப்பு

புவனேஷ்வர்:மேற்கு வங்காளத்தில் உள்ள நந்திகிராமில் நேற்று (நவ-12) நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் அகில் கிரி குடியரசுத் தலைவர் முர்முவின் தோற்றத்தை கேலி செய்ததாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து மேற்கு வங்க அமைச்சரின் செயலை கண்டித்து பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

பிஜூ தள கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்த யாருக்கும் உரிமை இல்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும் மாநில பாஜக பொதுச் செயலாளர் லேகாஸ்ரீ சமந்த்சிங்கர் குடியரசுத் தலைவரை அவமதிக்கும் எந்தச் செயலும் தண்டனைக்குரிய குற்றமாகும். கிரியை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், டிஎம்சி தலைவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் கிரியின் செயலுக்காக அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரும் எம்எல்ஏவுமான சுரேஷ் ரௌத்ரே, கிரியின் கருத்துக்களால் ஒவ்வொரு குடிமகனும் புண்பட்டுள்ளதாகக் கூறினார். இதற்கிடையில் அகில் கிரி மீது ஒடிசா முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. புவனேஸ்வரில் உள்ள தலைநகர் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க:தான் படித்த பள்ளிக்குச் சென்று நெகிழ்ந்தார் திரௌபதி முர்மூ...!

ABOUT THE AUTHOR

...view details