தமிழ்நாடு

tamil nadu

மதுபோதையில் நர்சிங் மாணவி கூட்டுபாலியல் வன்புணர்வு

By

Published : Dec 2, 2022, 9:33 PM IST

உத்தரகாண்ட் மாநிலத்தில் நர்சிங் மாணவியை கடத்தி கூட்டுபாலியல் வன்புணர்வு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுபோதையில் நர்சிங் மாணவி கூட்டுபாலியல் வன்புணர்வு
மதுபோதையில் நர்சிங் மாணவி கூட்டுபாலியல் வன்புணர்வு

டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலம் மொராதாபாத்தில் நர்சிங் மாணவியை கடத்தி கூட்டுபாலியல் வன்புணர்வு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மொராதாபாத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்துவரும் மாணவி நவம்பர் 29ஆம் தேதி வகுப்பை முடித்துவிட்டு நண்பருடன் ராம்நகர் சாலை வழியாக வீடு திரும்பிகொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் மாணவியை கடத்தினர். இதையடுத்து ஜஸ்பூரில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத கரும்பு தோட்டத்திற்கு மாணவியை கொண்டு சென்றனர்.

அதன்பின் மது அருந்திவிட்டு கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இறுதியாக மாணவியை ஜாஸ்பூர் பேருந்து நிலையம் அருகே இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து மாணவி மொராதாபாத் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் வழக்கு தொடர்பாக பிஜ்னோர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் இன்று (டிசம்பர் 2) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் மொராதாபாத்தில் நடத்த இறுதி சடங்குக்கு வந்துள்ளனர். அதன்பின் வீடு திரும்புகையில் மாணவியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தெலங்கானாவில் 16 வயது மகளை பாலியல் தொழிலுக்காக விற்ற தாய்

ABOUT THE AUTHOR

...view details