தமிழ்நாடு

tamil nadu

"நரேந்திர மோடியைக் கண்டு பயப்படவில்லை" - ராகுல்காந்தி!

By

Published : Aug 4, 2022, 3:16 PM IST

Modi

நரேந்திர மோடியைக் கண்டு தாங்கள் பயப்படவில்லை என்றும், அழுத்தம் கொடுப்பதால் தங்களை அமைதியாக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

டெல்லி:நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்குத்தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வந்தது.

இதைத்தொடர்ந்து நேஷனல் ஹெரால்டு கட்டடத்தில் உள்ள யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அலுவலர்கள் நேற்று(ஆகஸ்ட் 3) சீல் வைத்தனர். இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ராகுல்காந்தி, "நரேந்திர மோடியைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் உண்மையை மறைத்துவிட முடியாது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் நடக்கும் அனைத்தும் எங்களை மிரட்டும் முயற்சி.

அழுத்தம் கொடுப்பதால், எங்களை அமைதியாக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள், ஆனால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் ஜனநாயகத்திற்கு எதிராக என்ன செய்தாலும், நாங்கள் அதை எதிர்ப்போம்" என்று கூறினார்.

இதையும் படிங்க:ஆட்சேர்ப்பு ஊழல் வழக்கு - ஒரு மாதத்திற்கு இரண்டரை லட்சம் மதிப்புள்ள பழங்களை சாப்பிட்ட முன்னாள் அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details