திருவனந்தபுரம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, கொல்லம், ஆலப்புழா, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் 56 இடங்களில் இன்று (டிச. 29) என்ஐஏசோதனை நடைபெறுகிறது. தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு நிதியுதவி செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இந்த சோதனை நடைபெறுகிறது.
பிஎஃப்ஐ அமைப்பின் உறுப்பினர்கள், களப்பணியாளர்களின் இல்லங்களில் சோதனை நடைபெறுகிறது. கேரளாவில் இரண்டாவது நாளாக இன்று தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (உபா - UAPA) என்ற சட்டத்தின் பிரிவு 3-ஐ பயன்படுத்தி பிஎஃப்ஐ தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் தான் பிஎஃப்ஐ அமைப்பு முழுவீச்சில் செயல்பட்டது என்று கூறும் என்ஐஏ அதிகாரிகள், தடைக்குப் பின்னரும் கூட ரகசியமாக பிஎஃப்ஐ இயங்குவாதகவும் நிதி திரட்டுவதாகவும் வந்த தகவலையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பனிப்போர்வை போர்த்திய ஓசூர் - வாகன ஓட்டிகள் அவதி!