தமிழ்நாடு

tamil nadu

எங்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை : போதைப்பொருள் தடுப்பு பிரிவு

By

Published : Oct 6, 2021, 10:44 PM IST

மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் தங்கள் மீது வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்து அடிப்படை ஆதாரமற்றவை என போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCB) அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு
போதைப்பொருள் தடுப்பு பிரிவு

மும்பை: போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் இன்று (அக். 6) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கூறிய அவர், "மகாராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான நவாப் மாலிக், போதைப் பொருள் தடுப்பு பிரிவு (NCB) மீது வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் அடிப்படை ஆதாரமற்றவை.

என்சிபி அலுவலர்கள் சட்டரீதியாகவும், வெளிப்படத்தன்மையுடனும் பாரபட்சமற்ற வகையில்தான் அனைத்து நடவடிக்கையையும் மேற்கொண்டனர். மேலும், கிரண் கோஸாவி, மனீஷ் பானுசாலி ஆகியோர் அளித்த தகவலின்பேரில் தான் இந்த சோதனை நடத்தப்பட்டது என உறுதிசெய்தனர்.

முன்னதாக, ஆரியன் கான் கைது செய்யப்பட்டது முற்றிலும் போலியானது என்றும், பாஜகவோடு சேர்ந்து என்சிபி அலுவலர்களுடன் இணைந்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்றும் குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அடுத்த இலக்கு ஷாருக்: மகாராஷ்டிர அமைச்சர் தடாலடி

ABOUT THE AUTHOR

...view details