தமிழ்நாடு

tamil nadu

சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு!

By

Published : Aug 8, 2022, 4:57 PM IST

சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவலை அடுத்த 14 நாள்களுக்கு நீட்டித்து அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சஞ்சய் ராவத் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
சஞ்சய் ராவத் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள குடியிருப்புப்பகுதியை மாற்றியமைப்பதில் நிதி முறைகேடு நடந்தது தொடர்பான வழக்கில், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை அலுவலர்கள் ஆக. 1ஆம் தேதி கைது செய்தனர்.

இதையடுத்து, சஞ்சய் ராவத் அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் ஆக. 1ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை ஆக.4ஆம் தேதிவரை அமலாக்கத்துறை காவலில் சிறையிலடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், அவரின் காவல் ஆக.8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

அதன்படி, இன்று (ஆக. 8) காவல் முடிவடைந்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவலை அடுத்த 14 நாள்களுக்கு நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வீட்டு சாப்பாடு, மருந்துகள் குறித்து அவரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் படுக்கை வசதி குறித்த கோரிக்கையை மறுத்துவிட்டார்.

மேலும், சிறை நடைமுறைப்படி அவருக்கு படுக்கை வசதி கொடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'மாநிலங்களவையின் பணிகள் 70% அதிகரிப்பு' - வெங்கையா நாயுடு வழியனுப்பு விழாவில் பிரதமர்

ABOUT THE AUTHOR

...view details