தமிழ்நாடு

tamil nadu

உணவளித்தவரின் இறுதி ஊர்வலத்துடன் ஓடிய குரங்கு; ஆந்திராவில் நெகிழ்ச்சி சம்பவம்

By

Published : Oct 19, 2022, 7:51 PM IST

ஆந்திராவில் தினமும் உண்வளித்த நபர் இறந்ததால், இறுதி ஊற்வலத்துடன் குரங்கு ஒன்று ஓடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உணவளித்தவர் இறந்ததால்,  இறுதி ஊர்வலத்துடன் ஓடும் குரங்கு
உணவளித்தவர் இறந்ததால், இறுதி ஊர்வலத்துடன் ஓடும் குரங்கு

நந்தியால்: ஆந்திர மாநிலம் தோன் மாவட்டத்தில் உள்ள கொண்டபெட்டாவை சேர்ந்தவர் லட்சுமி தேவி. இவர் அதே பகுதியில் சாலையோரம் டிபன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். சாலையோர டிபன் கடை நடத்தி வந்த லட்சுமி தேவி ஒவ்வொரு நாளும் அவரது கடைக்கு வரும் குரங்கு ஒன்றுக்கு உணவு வழங்குவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார்.

அதன் படி, நேற்று வழக்கம் போல் லட்சுமியின் கடைக்கு அந்த குரங்கு வந்துள்ளது. ஆனால், லட்சுமி இறந்ததால் அவரை அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டிற்கு இறந்தவர்களை ஏற்றும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். அப்போது, அங்கு இருந்த குரங்கும் அந்த வாகனத்துடனே சாலை நெடுக்க ஓடி வந்துள்ளது. இந்த சம்பவம் பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

உணவளித்தவர் இறந்ததால், இறுதி ஊர்வலத்துடன் ஓடும் குரங்கு

இதையும் படிங்க:குதிரைகளுக்கான மாபெரும் கண்காட்சி; பல்வேறு ரகக் குதிரைகள் பங்கேற்பு

ABOUT THE AUTHOR

...view details