ETV Bharat / bharat

குதிரைகளுக்கான மாபெரும் கண்காட்சி; பல்வேறு ரகக் குதிரைகள் பங்கேற்பு

author img

By

Published : Oct 19, 2022, 12:46 PM IST

நாட்டின் மிகப்பெரிய கால்நடைக் கண்காட்சிகளில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தின் தேவன் கால்நடைக் கண்காட்சி நேற்று(அக்.18) தொடங்கியது.

குதிரைகளுக்கான மாபெரும் கால்நடைக் கண்காட்சி ; பல்வேறு ரகக் குதிரைகள் பங்கேற்பு
குதிரைகளுக்கான மாபெரும் கால்நடைக் கண்காட்சி ; பல்வேறு ரகக் குதிரைகள் பங்கேற்பு

உத்தரப் பிரதேசம்(பாரபங்கி): பாரபங்கி மாவட்டத்தில் நேற்று(அக்.18) விலங்கின ஆர்வலர்கள் சூழ புகழ்பெற்ற தேவன் கால்நடைக் கண்காட்சி தொடங்கியது. பிகாரின் சொனேபூர் கால்நடைக் கண்கட்சி, ராஜஸ்தானின் புஷ்கர் கால்நடைக் கண்காட்சிக்குப் பிறகு நாட்டின் மூன்றாவது பெரிய கால்நடைக் கண்காட்சியாக ‘பாரபங்கி மேளா’ என அழைக்கப்படும் இந்த கால்நடைக் கண்காட்சி விளங்கி வருகிறது.

இந்தக் கண்காட்சியின் சிறப்பான விஷயமே இதில் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்படும் குதிரைகள் தான். பல்வேறு ரகக் குதிரைகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்து இந்தக் கண்காட்சிக்கு அழைத்து வரப்படும். இந்தக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கிவிடும்.

இதுகுறித்து கண்காட்சிக்கு வருகை தந்த மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த கால்நடை விற்பனையாளரான சச்சின் கவாலி கூறுகையில், “மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குதிரை வாங்குவதற்கு தேவன் கண்காட்சிக்கு அதிகளவில் வருகை தருகின்றனர். ரூ.20,000 முதல் ரூ.1 கோடி வரை குதிரைகள் விற்பனையாகும். நாட்டின் முப்பெரும் கண்காட்சிகளில் இதுவே சிறந்த கண்காட்சி. பல விவசாயிகள், இங்கு குட்டிக் குதிரை வாங்கிச் சென்று அவை வளர்ந்ததும் அதை இங்கேயே விற்கும் வழக்கமும் உண்டு. ஆகையால், ஒரே குதிரை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மாநிலத்தாருக்கு பயன்படும்” என்றார்.

இதையும் படிங்க: மாகாராஷ்டிராவில் மின்னல் தாக்கியதில் சிறுமி உட்பட 4 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.