தமிழ்நாடு

tamil nadu

ஸ்மார்ட்போன் வாங்கினால் 2 கிலோ தக்காளி இலவசம்..! கடைக்காரர் ஸ்மார்ட் ஆபர்!

By

Published : Jul 8, 2023, 7:39 PM IST

மத்திய பிரதேசத்தில் உள்ள மொபைல் ஷோரும் உரிமையாளர் ஒருவர் ஸ்மார்ட் போன் வாங்கினால் இரண்டு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து உள்ளது நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

smartphone
smartphone

அசோக் நகர் : மத்திய பிரதேசத்தில் ஸ்மார்ட்போன் வாங்கினால் 2 கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என்ற கடை உரிமையாளரின் அறிவிப்பு சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.

தட்டுப்பாடு காரணமாக காய்கறிகள் விலை ஏறுவது சகஜம் தான், ஆனால் தற்போது ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் முதல் 160 ரூபாய் வரை விற்கப்படுவது நடுத்தர மக்களின் கனவை கலைத்து உள்ளது. தக்காளி விலை உயர்வு காரணமாக பிரபல உணவு நிறுவனமான மெக்டொனால்டு, தனது மெனுவில் இருந்து தக்காளியை நீக்கிவிட்டதாக செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

அதேநேரம் வாடிக்கையாளர்களை கவரும் வாய்ப்பை வணிகர்கள் ஒருபோதும் விட்டுவிட மாட்டார்கள். பண்டிகை காலங்களில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிறப்பு சலுகைகளை வணிக நிறுவனங்கள் அறிவிக்கும். ஆனால் சில வணிக நிறுவனங்கள் மட்டுமே வித்தியாசமாக சிந்தித்து வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கவும், விற்பனையை அதிகரிக்கவும் புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன.

அப்படி மத்தியப் பிரதேசத்தில் உள்ள அசோக் நகரை சேர்ந்த மொபைல் கடைக்காரர் ஒருவர் ஸ்மார்ட்போன் வாங்கினால் இரண்டு கிலோ தக்காளியை இலவசமாக வழங்குவதாக அறிவித்து உள்ளார். தற்போது சமூக வலைதள பக்கங்களில் இந்த தலைப்பு பலரது கவனத்தை ஈர்த்து உள்ளது.

ஆன்லைன் வர்த்தக நிறுவங்கள் வழங்கும் சலுகைகள், அதன் பக்கம் திரும்பும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், மொபைல் கடைக்காரர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் மொபைல் கடைக்காரர்கள் தங்கள் தயாரிப்புகளை விற்க புதிய திட்டங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் மத்தியப் பிரதேசம் மாநிலம் அசோக் நகரில் உள்ள மொபைல் ஷோரூமில், ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 2 கிலோ தக்காளி பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. போட்டி வியாபாரம், வர்த்தக சூழல் உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு மொபைல் கடைக்காரர் அபிஷேக் அகர்வால் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டத்தை வழங்கி உள்ளார்.

ஸ்மார்ட்போன் வாங்கும் போது 2 கிலோ தக்காளி பரிசாக வழங்கப்படும் என்ற திட்டம் அறிவிக்கப்பட்ட பின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கடைக்காரர் கூறுகிறார். இதனால், அதிக மொபைல்களை விற்பனை செய்து வருவதாகவும், அதே நேரத்தில், தக்காளி இலவசமாக வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க :பணக்கார கிரிக்கெட் வீரர் யார்? டோனியா.. கோலியா.. இல்ல சச்சினா..? யார் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details