தமிழ்நாடு

tamil nadu

சக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 8ஆம் வகுப்பு மாணவர்கள்

By

Published : Dec 2, 2022, 9:14 PM IST

மும்பை மட்டுங்கா மாநகராட்சிப் பள்ளி ஒன்றில், 8ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர், சக மாணவியை வகுப்பறையிலேயே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MH
MH

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மட்டுங்கா பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளி ஒன்றில், கடந்த 28ஆம் தேதி, 8ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர், சக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். நடனப் பயிற்சிக்காக வகுப்பு மாணவர்கள் அனைவரும் வெளியே சென்றபோது, வகுப்பறைக்குள்ளேயே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு மாணவர்களையும் கைது செய்து, சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரும் டோங்கிரியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:தெலங்கானாவில் 16 வயது மகளை பாலியல் தொழிலுக்காக விற்ற தாய்

ABOUT THE AUTHOR

...view details