நிசாமாபாத்: தெலங்கானா மாநிலம் நிசாமாபாத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கிராமின் வங்கியில், முகமூடி கொள்ளையர்கள் சிலர், லாக்கரை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 4 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 8 புள்ளி 3 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "கொள்ளையர்கள் வங்கிக் கட்டடத்தின் பின்புறம் வழியாக சென்று, வங்கியில் பொறுத்தப்பட்டிருந்த தானியங்கி அலாரத்தின் ஒயர்களை அறுத்துள்ளனர். சிசிடிவி கேமராக்களையும் உடைத்துள்ளனர். பின்னர் வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், கேஸ் கட்டரை வைத்து லாக்கரை உடைத்துள்ளனர்.
கொள்ளையர்கள் பயன்படுத்திய முகமூடி இந்த லாக்கரில் இருந்த 8 புள்ளி 3 கிலோ தங்க நகைகள், 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்களை திருடப்பட்டன. லாக்கரை கட்டரால் உடைக்கும்போது, சில நகைகள் மற்றும் பணம் எரிந்துள்ளது. கரடி போல முகமூடி அணிந்தவர்கள், கொள்ளையடித்துச் செல்லும்போது வங்கியில் அதை விட்டுச் சென்றுள்ளனர்.
கடந்த 2ஆம் தேதி நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து நேற்று(ஜூலை 4) வங்கிக்கு சென்ற ஊழியர்கள் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து, தகவல் கொடுத்தனர். நாங்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டோம். கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம். வெளிமாநில கொள்ளை கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கும் என சந்தேகிக்கிறோம்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய தந்தை மகன் கைது