தமிழ்நாடு

tamil nadu

சொத்து பிரச்சனை காரணமாக சகோதரனை கொல்ல முயன்று தற்கொலை செய்துகொண்ட நபர்

By

Published : Jan 27, 2023, 11:48 AM IST

கர்நாடகாவில் சகோதரர் மற்றும் மைத்துனை கொல்ல முயற்சி செய்த ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட நபர்
தற்கொலை செய்துகொண்ட நபர்

உடுப்பி: கர்நாடக மாநிலம் முண்ட்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா (46). இவர் அந்த பகுதியில் சொந்தமாக டாக்ஸி ஓட்டி வருகிறார். நேற்றிரவு அவரது சகோதரரின் மகளின் திருமணத்திற்காக அவரது வீட்டில் நடைபெற்ற மெஹந்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், தனது சகோதரர் மற்றும் மைத்துனன் அவரது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். இதனிடையே கிருஷ்ணா தனது ஆம்னி காருக்குள் சென்று தானே தீ வைத்துக்கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்துக்கு விரைந்து அவரது உடலை மீட்டனர். இதுகுறித்து போலீசார் தரப்பில் “இந்த நபருக்கும் அவரது மைத்துனன் மற்றும் சகோரருக்கும் சொத்து பிரச்சனை இருந்துள்ளது.

இதன் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது சகோரர் மற்றும் மைத்துனர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். ஆனால், அவர்கள் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அறிந்த அவர் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு புகார்கள் பெறப்பட்டுள்ளன. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:ஓடும் பேருந்தில் பெண் பாலியல் வன்கொடுமை.. நிர்பயா வழக்கை நினைவூட்டிய பீகார் சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details