தமிழ்நாடு

tamil nadu

மகாத்மா காந்தியின் உண்மையான தந்தை யார் தெரியுமா? - வலதுசாரி பிரமுகரின் கருத்தால் பரபரப்பு!

By

Published : Jul 29, 2023, 8:06 AM IST

மகாத்மா காந்தியின் உண்மையான தந்தை ஒரு முஸ்லீம் நிலச்சுவான்தார் என்று வலதுசாரி பிரமுகர் சம்பாஜி பிடே தெரிவித்து உள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாத்மா காந்தியின் உண்மையான தந்தை யார் தெரியுமா - வலதுசாரி பிரமுகரின் கருத்தால் பரபரப்பு!
மகாத்மா காந்தியின் உண்மையான தந்தை யார் தெரியுமா - வலதுசாரி பிரமுகரின் கருத்தால் பரபரப்பு!

அமராவதி:மகாத்மா காந்தியின் உண்மையான தந்தை ஒரு முஸ்லீம் நிலச்சுவான்தார் என்று மகாராஷ்டிரா மாநிலம் சங்க்லி பகுதியைச் சேர்ந்த வலதுசாரி பிரமுகர் சம்பாஜி பிடே தெரிவித்து உள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீ ஷிவபிரதிஸ்தான் ஹிந்துஸ்தான் சன்ஸ்தா அமைப்பின் நிறுவனரான சம்பாஜி பிடே, ஆந்திர மாநிலம் அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியையே நாம் மகாத்மா காந்தி என்று அழைத்து வருகின்றோம். ஆனால் கரம்சந்த் காந்தி, மோகன்தாஸின் தந்தை அல்ல. ஒரு முஸ்லீம் நில உரிமையாளர் அவரது உண்மையான தந்தை என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, மகாத்மா காந்தியைப் பற்றி அவர் கூறியதற்கு கணிசமான ஆதாரங்கள் உள்ளன. கரம்சந்தின் நான்காவது மனைவியின் மகன்தான் இந்த மோகன்தாஸ்."கரம்சந்த் தன்னுடன் பணிபுரிந்த முஸ்லீம் ஜமீன்தாரிடம் இருந்து பெரும் தொகையை திருடிவிட்டான். ஆத்திரமடைந்த முஸ்லீம் ஜமீன்தார், கரம்சந்தின் மனைவியை கடத்தி தன்னிடம் அழைத்து வந்தார். அவரை மனைவியாகவே நடத்தினார். எனவே கரம்சந்த் காந்தி மோகன்தாஸின் உண்மையான தந்தை அல்ல. அவர் அந்த முஸ்லீம் நில உரிமையாளரின் மகன்" என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

மோகன்தாஸ் அதே முஸ்லீம் தந்தையால் வளர்க்கப்பட்டு கல்வி கற்றார் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. "இந்தியா ஒரு இந்து நாடு. இந்துக்களின் வீரம் மகத்தானது. ஆனால், இந்துக்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த மதம், கடமை மற்றும் பொறுப்புகளை மறந்து விடுவதால் அவர்கள் சீரழிந்து உள்ளதாக பிடே விமர்சனம் கூறி உள்ளார்.

இதற்கு பதில் அளித்து உள்ள காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிரா மாநிலம் சங்கம்னேர் தொகுதி எம்எல்ஏவுமான பாலாசாகேப் தொராட் கூறியதாவது, “மகாத்மா காந்தி குறித்து பிடே மிகவும் இழிவான கருத்தை தெரிவித்து உள்ளார். இது நாட்டு மக்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது. பிடே தொடர்ந்து இது போன்ற கேவலமான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அவருக்கு யார் சரியாக ஆதரவு அளிக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

பிடேயின் நோக்கம் என்ன என்று தெரிய வேண்டும். யாருடைய அரசியல் நலனுக்காக அவர் மீண்டும் மீண்டும் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகிறார்? நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். சபையில் பிடே மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கிறேன். இந்த விவகாரத்தில், அரசு விரைந்து செயல்பட்டு பிடே மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:‘காங்கிரஸ் - திமுக என்றாலே ஊழல் தான் நினைவிற்கு வரும்’ - அமித் ஷா விமர்சனம்!

ABOUT THE AUTHOR

...view details