தமிழ்நாடு

tamil nadu

பீகார் துணை முதல்வர் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது சிறப்பு நீதிமன்றம்!

By ANI

Published : Sep 22, 2023, 11:01 PM IST

Land for Job Scam: முன்னாள் ரயில்வே துறை அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் மற்றும் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது நில மோசடி வழக்கு தொடர்பாகத் தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.

land-for-job-scam-delhi-court-summons-lalu-yadav-tejashwi-takes-cognizance-on-cbi-chargesheet
பீகார் துணை முதல்வர் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது சிறப்பு நீதிமன்றம்

பீகார்: முன்னாள் ரயில்வே துறை அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் மற்றும் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது நில மோசடி வழக்கு தொடர்பாகத் தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று (செப்.22) சம்மன் அனுப்பியுள்ளது. சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல் சிபிஐ தாக்கல் செய்த புதிய குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளார்.

சிபிஜ தரப்பில், நில மோசடி தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது குற்றப்பத்திரிக்கையாகும். இந்த குற்றப்பத்திரிக்கையில் அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சர், அவரது மனைவி, மகன் உள்பட 17 நபர்கள் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர்.

2022, மே 18ஆம் தேதி நில மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் ரயில்வே துறை அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி, இரண்டு மகள்கள், அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நபர்கள் உட்படப் பலர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தனர். 2004-2009 ஆகிய காலத்தில் ரயில்வே துறையில் குரூப் "D" பதவியில் மாற்றுத் திறனாளிகளை நியமிப்பதற்குப் பதிலாக நிலங்கள் மற்றும் பணம் பெற்றதாகக் குற்றச் சாட்டப்பட்டுள்ளன.

சிபிஐ தரப்பில், ரயில்வே துறையில் மாற்றுத் திறனாளிகள் நியமனம் செய்ய விளம்பரம் அல்லது பொது அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் பாட்னாவில் குடியிருக்கும் நபர்களுக்கு மும்பை ஜபல்பூர், கொல்கத்தா, ஜெய்ப்பூர் மற்றும் ஹாசிபூர் ஆகிய பல்வேறு இடங்களில் உள்ள ரயில்வேயில் மாற்றுத் திறனாளிகளாக நியமிக்கப்பட்டனர். இதற்காக பாட்னாவில் வசிக்கும் நபர்களிடம் உள்ள அசையா சொத்துக்களைப் பெற்று தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் மாற்ற பல்வேறு முறைகேடுகளை தனியார் நிறுவன உதவியுடன் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், ரயில்வே துறையில் வேலை வாங்குவதற்கு பல்வேறு ரயில்வே துறை அதிகாரிகள் உதவி செய்துள்ளனர். மேற்கு மத்திய ரயில்வே துறை மற்றும் மத்திய ரயில்வே துறை அதிகாரிகள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே துறையில் வேலைகள் வழங்க முறைகேடுகள் நடந்துள்ளன. இது தொடர்பான, விசாரணையின் போது வேலைக்குச் சேர்ந்தவர்கள் தொடர்பான ஹார்ட் டிஸ்க் (Hard Disk) ஒன்று மீட்கப்பட்டதாகவும், மேலும், 2007ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் ஒன்றின் பெயரில் 10.83 லட்சம் மதிப்பில் இடம் வாங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளன என சிபிஐ தெரிவித்துள்ளன.

மேலும், நிலங்கள் தனியார் நிறுவனங்களால் வாங்கப்பட்ட விலையை விட மிகக் குறைந்த விலைக்கு மாற்றப்பட்டது தெரியவந்துள்ளன. இந்த வழக்கு, தொடர்பான முதல் குற்றப்பத்திரிக்கையானது 2022 அக்டோபர் 7ஆம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:சந்திரபாபு நாயுடு மீதான வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி!

ABOUT THE AUTHOR

...view details