தமிழ்நாடு

tamil nadu

லக்கிம்பூர் வன்முறை - சம்பவயிடத்தில் அமைச்சர் மகன்

By

Published : Oct 14, 2021, 8:27 PM IST

லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சம்பவயிடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

Lakhimpur violence
Lakhimpur violence

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதி அருகே அக்டோபர் மூன்றம் தேதி விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இதில் ஊடகவியலாளர் உள்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது புகார் தெரிவிக்கப்பட்டது. கடும் அழுத்தத்திற்கு இடையே ஆஷிஷ் மிஸ்ராவை உத்தரப் பிரதேச காவல்துறை அக்டோபர் 9ஆம் தேதி கைது செய்தது.

மீண்டும் சம்பவயிடத்தில் ஆஷிஷ் மிஸ்ரா

போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆஷிஷ் மிஸ்ராவும் மற்ற குற்றஞ்சாட்டப்பட்டவர்களும், இன்று லக்கிம்பூரிலிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள சம்பவயிடமான திகோனியா-பன்பீர்பூர் ரோட் பகுதிக்கு காவல்துறையினரால் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை வைத்து காவல்துறை அக்டோபர் மூன்றாம் தேதி நடைபெற்ற சம்பவத்தை மீண்டும் நிகழ்த்திக்காட்டக் கூறியது.

இவர்களின் வருகையை ஒட்டி அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் லக்கிம்பூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க:மேலும் ஐந்து நாள்கள் ஆர்யன் கானுக்கு சிறைவாசம்

ABOUT THE AUTHOR

...view details