தமிழ்நாடு

tamil nadu

Karnataka Night curfew:அதிகரிக்கும் ஒமைக்ரான் - கர்நாடகாவில் இரவு ஊரடங்கு அமல்

By

Published : Dec 26, 2021, 12:55 PM IST

Karnataka Night curfew: கர்நாடகாவில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் டிசம்பர் 28 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

38 new omicron cases in Karnataka  Karnataka to be imposed night curfew  karnataka news  கர்நாடகாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான்  கர்நாடகாவில் இரவு ஊரடங்கு அமல்  கர்நாடகாவில் ஒமைக்ரான் தொற்று 38 பேருக்கு உறுதி
Karnataka Night curfew Dec28

கர்நாடகா:Karnataka Night curfew:கர்நாடகாவில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது, புதிய வகை கரோனவும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை டிசம்பர் 28 முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று சுகாதாரத் துறை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தை தொடர்ந்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பின் போது கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா ஜனேந்திரா, சுகாதாரத் துறை அமைச்சர் கே சுதாகர் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர். மேலும் காவல் துறையினரும் இந்த கூட்டத்தில் இருந்தனர்.

சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சுகாதார துறை அமைச்சர் கே சுதாகர் மாநிலத்தில் மாறுப்பட்ட ஒமைக்ரான் தொற்று 38 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்து இருந்தார். அவரின் ட்விட்டர் பக்கத்தில் டிசம்பர் 25 வரை புதியதாக 7 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது என பதிவிட்டிருந்தார்.

அவர் கூறிய அறிவிப்பில் 7 புதிய தொற்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு.

தொற்று உடையவர்களின் தொடர்பில் இருந்தவர்கள்

டெல்லியில் இருந்து பயணம் செய்த பெங்களூரை சேர்ந்த 76 வயது முதியவர், அரபு நாட்டில் இருந்து திரும்பிய 30 வயது பெங்களூரை சேர்ந்த இளம்பெண், ஜாம்பியா சென்று திரும்பிய 63 வயது முதியவர், லண்டனில் இருந்து வந்த நபருடன் தொடர்பில் இருந்த 54 வயதுடைய நபர் ஆகியோருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், பெங்களூருவில் லண்டன் சென்று திரும்பிய 21 வயது பெண் மற்றும் 15 வயது சிறுவனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாக் சுகாதார துறை அமைச்சர் சுதாகர் கூறினார். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 15 வயது சிறுவனை தவிர அனைவரும் தடுப்பூசிகள் எடுத்து கொண்டவர்கள் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:Omicron India update: அதிகரிக்கும் ஒமைக்ரான் பரவல்; கட்டுப்படுத்த புதிய தடுப்பூசி திட்டம்

ABOUT THE AUTHOR

...view details