தமிழ்நாடு

tamil nadu

கர்நாடகா பந்த்: பள்ளி, கல்லூரிகள் விடுமுறை; 44 விமானங்கள் ரத்து.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 1:30 PM IST

Karnataka Bandh update: காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடுவதைக் கண்டித்து கர்நாடகாவில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

karnataka-bandh-over-cauvery-issue-protests-disrupt-normal-life
கர்நாடகாவில் பந்த்: 44 விமானங்கள் ரத்து - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

பெங்களூரு: காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடுவதைக் கண்டித்து இன்று கர்நாடகா மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கன்னட ஒன்றியம் என்ற பெயரில் நடத்தப்படும் பந்த் காரணமாகப் பள்ளி கல்லூரிகள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் செயல்படவில்லை மேலும் 44 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கர்நாடக மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடுவதைக் கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த பந்த் கன்னட ஒன்றியம் என்று பெயரிடப்பட்டு கர்நாடகா விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரு, மாண்டியா, மைசூரு, சாமராஜநகரா, ராமநகரா மற்றும் ஹாசன் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:‘திமுகவின் ஏஜெண்டாக செயல்படும் கர்நாடக முதலமைச்சர்’ - பாஜக, ஜேடிஎஸ் கூட்டணி குற்றச்சாட்டு!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலுள்ள ப்ரீடம் பூங்காவில் கர்நாடகா தண்ணீர் பற்றாக்குறை எடுத்துக்காட்டும் விதமாகப் பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்து குளிக்கும் விதமாக நூதன முறையில் போராட்டத்தில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று (செப்.29) பந்த் நடைபெறுவதால் பெங்களூரு நகர்ப்புறம், மாண்டியா, மைசூர், சாமராஜநகரா, ராமநகரா மற்றும் ஹாசன் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கலவரம் மற்றும் அசம்பாவிதங்களைத் தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக இப்பகுதிகளிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (செப்.29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் இன்று (செப்.29) நடைபெறும் போராட்டத்திற்குக் கன்னட ஒன்றியம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கர்நாடகா மாநில தன்னார்வலர்கள் மற்றும் விவசாயிகளை ஒன்று இணைக்கும் விதமாகக் கன்னட ஒன்றியம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா பந்த்-க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திரையரங்குகளில் இன்று ஒரு நாள் திரைப்படக் காட்சிகளை ரத்து செய்தனர்.

இதையும் படிங்க:கர்நாடகா பந்த் காரணமாக ஈரோடு எல்லையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்!

கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரின் முக்கிய சந்தைப் பகுதிகளான சிக்பேட், பாலேபேட்டை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பெங்களூரிலுள்ள பெரிய மற்றும் சிறிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IT Companies) தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து இந்து வேலைகள் செய்யக் கூறியுள்ளனர். மேலும் ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர் சங்கம், Ola, Uber ஆகியோர் போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததால் கர்நாடகா மாநிலத்தில் பல பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

காவிரிப் படுகை மாவட்டமான மாண்டியா மற்றும் தென்பகுதிகளில் போராட்டக்காரர்களுடன் வணிக நிறுவனங்கள் உணவகங்கள் உட்பட அனைவரும் ஆதரவு தெரிவித்ததால் இப்பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிகளில் தனியார் வாகனங்களும் போராட்டக்காரர்களால் நிறுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:கர்நாடகா பந்த்: பெங்களூரு செல்லும் தமிழக வாகனங்களை எச்சரித்து அனுப்பும் போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details