தமிழ்நாடு

tamil nadu

ஹிஜாப் தடை செல்லும் - கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவு

By

Published : Mar 15, 2022, 10:44 AM IST

Updated : Mar 15, 2022, 10:51 AM IST

ஹிஜாப் தடை
ஹிஜாப் தடை ()

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த அரசாணை செல்லும் என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்த வழக்கு விசாரணை கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரீத்து ராஜ் அஸ்வதி, நீதிபதி கிருஷ்ணா, நீதிபதி ஜேஎம் காசி ஆகியோரின் அமர்வு வழக்கை 11 நாள்கள் விசாரித்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், ஹிஜாப் அணிவது இஸ்லாமில் கட்டாயம் இல்லை என்றும், அரசுக்கு சீருடை தொடர்பாக ஆணை வழங்க அதிகாரம் உள்ளது எனவும் கூறியுள்ளனர். எனவே, கர்நாடகா அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என உத்தரவிட்ட நீதிமன்றம், மாணவிகள் தரப்பு மனுக்களை தள்ளுபடி செய்யதுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் ஒன்பது ரிட் மனுக்களையும், 35 இடைக்கால மனுக்களையும் விசாரித்து முடித்த நீதிமன்றம் இந்த தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள கல்லூரியில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வந்துள்ள நிலையில், அரசின் உத்தரவைக்காட்டி அவர்களுக்கு கல்லூரி தடை விதித்துள்ளது.

கல்வி நிலையங்களில் சீருடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி கேட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு எதிராக இந்து அமைப்புகளும், மாணவர்களும் பதில் போராட்டம் நடத்திய நிலையில், மாநில அளவிலான சட்டம் ஒழுங்கு பிரச்னையாக இது உருவெடுத்தது.

இதையும் படிங்க:பள்ளிகளில் இன்டெர்னெட் சேவை கொண்ட மாநிலங்கள்... யார் டாப், யார் மோசம்?

Last Updated :Mar 15, 2022, 10:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details