தமிழ்நாடு

tamil nadu

காங்கிரசில் இணைகிறாரா கன்னையா குமார்?

By

Published : Sep 16, 2021, 1:04 PM IST

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இளந்தலைவரான கன்னையா குமார் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kanhaiya Kumar
Kanhaiya Kumar

ஜேஎன்யூ பல்கலைகழக மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இளந்தலைவருமான கன்னையா குமார் காங்கிரஸ் கட்சியில் சேரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான அதிருப்தியின் காரணமாக கன்னையா குமார் இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஹைதரபாத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டதில் கன்னையா குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சம்பவத்திலிருந்து கன்னையா குமார் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்து வருகிறார். இந்நிலையில், கன்னையா குமாருக்கு காங்கிரசில் இருந்து அழைப்பு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தீவிரம் காட்டும் காங்கிரஸ் கட்சி

இச்சூழலில், அதிருப்தியில் உள்ள கன்னையா குமார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை செப்டெம்பர் 10ஆம் தேதி சந்தித்தார். இச்சந்திப்பில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரும் உடனிருந்தார்.

அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சிறந்த பேச்சாளரான கன்னையா குமாரை கட்சியில் சேர்க்க காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு கன்னையா குமாரும் இணக்கம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அண்மைக் காலத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிராத்திய சிந்தியா, சுஷ்மிதா தேவ், ஜிதின் பிரசாதா, பிரியங்கா காந்தி போன்ற தலைவர் வெளியேறினர். இச்சூழலில் கன்னையா குமாரின் வருகை கட்சிக்கு புத்துணர்ச்சியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரையும் காங்கிரஸில் சேர்க்கும் முயற்சி நடைபெற்று வருவது குற்றப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தெலங்கானா சிறுமி பாலியல் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட நபர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details