தமிழ்நாடு

tamil nadu

ஜம்மூ காஷ்மீர் தேர்தல் ஆயத்தப்பணிகளை தொடங்கியது மாநில தேர்தல் ஆணையம்!

By PTI

Published : Jan 10, 2024, 2:00 PM IST

J & K election 2024: ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான ஆயத்தப் பணிகளை அம்மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்றதும், சட்டமன்றத் தேர்தல் 2014ஆம் ஆண்டு நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Etv Bharat
Etv Bharat

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் வரும் கால் ஆண்டிற்குள் சட்டமன்றத் தேர்தலும், அதனைத் தொடர்ந்து பஞ்சாயத்து தேர்தலும், நகர்புற உள்ளாட்சித் தேர்தலும் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டிற்கு பிறகு ஜம்மூ காஷ்மீரில், சட்டமன்றத் தேர்தல் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 4 ஆயிரத்து 892 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அவர்களின் கால பணி நேற்றுடன் (ஜன.9) நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் சிறப்பு முகாம், இம்மாதம் 15ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக, அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல் ஆணையர் பி.ஆர் ஷர்மா, “உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் இந்த சிறப்பு முகாம், இம்மாதம் 15ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெறும். அதில், 2024 ஜனவரி 1ஆம் தேதியோடு 18 வயது நிரம்பும் அனைவரும் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும், இந்த வாக்காளர் சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக, திருத்தம் செய்வதற்கான 4 சிறப்பு முகாம்கள் ஜனவரி 27, 28 மற்றும் பிப்ரவரி 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும். திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் பிப்ரவி 26ஆம் தேதி வெளியிடப்படும்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து தேர்தலில் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை குறித்து பேசும்போது தகுதி உடையவர்கள், தங்களை பதிவு செய்து கொண்டு வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக, உச்ச நீதிமன்றம் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019 தீர்ப்பின்போது, அம்மாநில தேர்தல்களுக்கான காலக்கெடு செப்டம்பர் 2024 வரை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், யூனியன் பிரதேசங்களில் இருக்கும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை கலைப்பதற்காகவே, உள்ளாட்சித் தேர்தலை பாஜக வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக, காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து பேசிய ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரவிந்தர் ஷர்மா, "ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு சீர்குலைந்துள்ளது. பாஜக, தோல்வி பயத்தில் வேண்டுமென்றே உள்ளாட்சித் தேர்தல்களை தாமதப்படுத்துகிறது.

மேலும், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி குறித்து, மத்தியில் ஆளும் பாஜக இன்னும் தெளிவுபடுத்தாததைக் குறித்து சாடிய ரவிந்தர் ஷர்மா, "உள்ளாட்சித் தேர்தல்களை தாமதப்படுத்துவதன் முலம், மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு அம்மாநில மக்களின் உரிமையையும், சுதந்திரத்தையும் புறக்கணிக்கிறது" எனக் கூறினார்.

இதையும் படிங்க:இந்தியாவுடனான உறவில் விரிசல்! மாலத்தீவு சுற்றுலா வருமாறு சீன மக்களை அதிபர் வலியுறுத்தலா? உண்மை என்ன?

ABOUT THE AUTHOR

...view details