தமிழ்நாடு

tamil nadu

ஜி20 மாநாடு: இண்டிகோ விமான ரத்து குறித்து பயணிகளுக்கு அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 4:55 PM IST

G20 Summit Flight Cancellation: ஜி20 மாநாடு நடைபெற உள்ளதால் அன்று முன் பதிவு செய்திருந்தால் தங்களது பயணத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம் அல்லது ரத்து செய்து கொள்ளலாம் என இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

indigo-notifies-passengers-about-flight-cancellations-in-connection-with-g20-summit
ஜி20 மாநாடு - இண்டிகோ விமான ரத்து குறித்து பயணிகளுக்கு அறிவிப்பு!

டெல்லி: இண்டிகோ நிறுவனம் தனது பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "தலைநகர் டெல்லியில் 2023ஆம் ஆண்டின் G20 மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறுவதால் இண்டிகோ விமானத்தின் பயணிகள் செப்டம்பர் 9 மற்றும் 11ஆம் தேதி வரை உள்ள தினத்தில் டெல்லிக்கு வரவதற்காக அல்லது டெல்லியிலிருந்து வேறு பகுதிக்கு செல்ல முன் பதிவு செய்திருந்தால் தங்களது பயணத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம் அல்லது ரத்து செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ள அறிவிப்பாணையின் படி செப்டம்பர் 9 மற்றும் 11ஆம் தேதி வரை எத்தனை விமானங்கள் ரத்து செய்யப்பட உள்ளது என்ற விபரத்தை அளிக்கவில்லை. G20 உச்சி மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் தேசிய தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் விமான பயணங்களை மாற்றி அமைத்தல் அல்லது பயணங்களை ரத்து செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தாய்லாந்து - சென்னை.. கடத்திவரப்பட்ட 14 அரிய வகை மலைப்பாம்பு குட்டிகள்.. விமான நிலையத்தில் பறிமுதல்..

டெல்லியில் G20 மாநாடு நடைபெறுவதால் டெல்லி விமான நிலையத்தில் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விமான பயணத்தை வாடிக்கையாளர்கள் ரத்து செய்து கொள்ளலாம் அல்லது விமான பயணத்தை மாற்றி அமைத்து கொள்ளலாம் என விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 10 தேதி வரை உள்ள காலகட்டத்தில் சுமார் 120 விமானங்கள் வரை ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் DIAL மூலம் இயக்கப்படுகிறது. மேலும் டெல்லி விமான நிலையம் நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமாகும் தினமும் சமார் 1300 விமானங்களை இந்த விமான நிலையம் கையாளுகிறது. இதுவரை விமான நிறுவனங்களிடம் இருந்து 80 மேற்பட்ட விமான புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஜி20 மாநாட்டின் அழைப்பிதழ் விவகாரம்.. "என்னை கேட்ட அச்சடித்தார்கள்" - அமைச்சர் துரைமுருகன்!

ABOUT THE AUTHOR

...view details