தமிழ்நாடு

tamil nadu

விண்வெளியின் அற்புதப் புகைப்படங்களை எடுப்பதில் பங்காற்றிய 3 இந்தியப்பெண் விஞ்ஞானிகள்!

By

Published : Jul 15, 2022, 7:23 PM IST

நாசா வெளியிட்ட விண்வெளியின் அற்புதமான புகைப்படங்களை எடுப்பதில், மூன்று இந்தியப் பெண் விஞ்ஞானிகள் பங்காற்றியுள்ளனர்.

NASA
NASA

லக்னோ: விண்வெளியில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்களை நாசா சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. மனிதர்கள் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத விண்வெளியின் அந்த புகைப்படங்களை உலக மக்கள் அனைவரும் வியந்து பார்த்தனர்.

விண்மீன் திரள், தெற்கு வளைய நெபுலா, ஸ்டிபன்ஸ் குவின்டெட், கரினா நெபுலா உள்ளிட்ட நாசா வெளியிட்ட அதிசயமான புகைப்படங்களை மக்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். கரினா நெபுலா என்ற புகைப்படம், விண்வெளியின் ஆழமான அகச்சிவப்பு காட்சி என்று கூறப்படுகிறது.

இந்த புகைப்படங்களை உலகின் மிகச்சிறந்த விண்வெளி தொலைநோக்கிகளில் ஒன்றான ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நமக்கு வழங்கியுள்ளது. உலகமே பாராட்டும் அந்த புகைப்படங்களை எடுத்த குழுவில் இந்தியப் பெண் விஞ்ஞானிகள் இருக்கிறார்கள் எனத் தெரியவந்துள்ளது.

லக்னோவைச் சேர்ந்த டாக்டர் ஹஷிமா ஹசன், மும்பையைச் சேர்ந்த விஞ்ஞானி கல்யாணி சுகத்மே, வானியலாளர் நிமிஷா குமாரி ஆகிய இந்தியப்பெண் ஆராய்ச்சியாளர்கள் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை செயல்படுத்தி இந்த புகைப்படங்களை எடுப்பதில் பணியாற்றியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளனர்.

இதையும் படிங்க:குரங்கம்மை வைரஸ் பரவல்... தெரிந்துகொள்ள வேண்டியவை....!

ABOUT THE AUTHOR

...view details