தமிழ்நாடு

tamil nadu

இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கக் கூடிய அக்னி-5 சோதனை வெற்றி

By

Published : Oct 28, 2021, 7:22 AM IST

Updated : Oct 28, 2021, 7:28 AM IST

surface-to-surface ballistic missile  Agni-5  அக்னி 5  ஏவுகணை  வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட அக்னி 5  ballistic missile
அக்னி-5

ஐந்தாயிரம் கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய அக்னி-5 ஏவுகணை, வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.

டெல்லி:சுமார் ஐந்தாயிரம் கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய ஆற்றல் கொண்ட அக்னி-5 ஏவுகணையை (டி.ஆர்.டீ.ஓ) இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நேற்று (அக்டோபர் 27) வெற்றிகரமாகச் சோதனை செய்தது.

அப்துல்கலாம் தீவில் சோதனை

ஏவுகணை சோதனையை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்றதாக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.நிலத்திலிருந்து ஏவக்கூடிய இந்த ஏவுகணை நிலத்தில் உள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

அக்னி-5 சோதனை வெற்றி

இந்தியாவை மேம்படுத்த

அக்னி-1 முதல் அக்னி 4 வரையிலான ஏவுகணைகள் சுமார் 700 கிமீ முதல் 3,500 கிமீ வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை. இந்நிலையில் அக்னி-5 ஏவுகணையானது, 12,000-15,000 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் சீனாவின் டாங்ஃபெங்-41 ஏவுகணைக்கு எதிராக, இந்தியாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தடுப்பூசி திட்டத்தை வேகப்படுத்துங்கள் - பத்து மாநிலங்களுக்கு அறிவுரை

Last Updated :Oct 28, 2021, 7:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details