தமிழ்நாடு

tamil nadu

இன்றைய கோவிட் பாதிப்பு!

By

Published : Apr 9, 2022, 12:19 PM IST

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,150 பேர் கரோனா வைரஸ் பெருந்தொற்றினால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

India
India

புது டெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,150 பேருக்கு கரோனா பெருந்தொற்று புதிதாக ஏற்பட்டுள்ள நிலையில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா பரவல் விகிதம் 0.25 சதவீதம் ஆக உள்ளது.

இந்தத் தகவல், மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை (ஏப்.9) வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும், “நாடு முழுக்க 11,365 பேர் மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட மையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நேற்று மட்டும் 1,194 பாதிப்பாளர்கள் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தனர். அந்த வகையில் சிகிக்சைக்கு பின்னர் குணமுற்றோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து ஆயிரத்து 196 ஆக உள்ளது. அந்த வகையில் மீட்பு விகிதம் 98.76 சதவீதம் ஆக உள்ளது.

இதற்கிடையில், நேற்று பதிவாக 83 உயிரிழப்புகளுடன், மொத்த உயிரிழப்பு 5 லட்சத்து 21 ஆயிரத்து 656 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 66 ஆயிரத்து 362 பேருக்கு கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :’கரோனாவை ஜெயித்துவிட்டதாக நினைப்பது முட்டாள்தனம்’ - ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details