தமிழ்நாடு

tamil nadu

இந்தியாவில் 18 ஆயிரம் கோவிட் பாதிப்புகள்!

By

Published : Oct 11, 2021, 1:03 PM IST

நாட்டில் ஒரே நாளில் 18 ஆயிரம் புதிய கோவிட் பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

COVID-19
COVID-19

டெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 132 புதிய கோவிட் பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 193 ஆக பதிவாகியுள்ளது. அதிகப்பட்சமாக கேரளத்தில் 85 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு ஒரே நாளில் புதிய பாதிப்பு 10 ஆயிரத்து 691 ஆக உள்ளது.

நாடு முழுக்க 21 ஆயிரத்து 563 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமாகியுள்ளனர். 2 லட்சத்து 27 ஆயிரத்து 347 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மீட்பு விகிதம் 98 விழுக்காடு ஆக அதிகரித்துள்ளது.

இந்தத் தகவல்கள் ஒன்றிய அரசின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் இதுவரை 95.19 கோவிட் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. ஐசிஎம்ஆர் (இந்திய மருத்துவ கவுன்சில்) தகவலின்படி ஞாயிற்றுக்கிழமை (அக்.10) மட்டும் 10 லட்சத்து 35 ஆயிரத்து 797 பேருக்கு சளி உள்ளிட்ட மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இதுவரை 58.36 கோடி பேருக்கு கோவிட் கண்டறிதல் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவில் கோவிட் மீட்பு விகிதம் 97.99% ஆக அதிகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details