தமிழ்நாடு

tamil nadu

இந்தியாவில் மேலும் 40 ஆயிரம் பேருக்கு கரோனா

By

Published : Aug 2, 2021, 10:22 AM IST

கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரத்து 946 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா
கரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 40 ஆயிரத்து 134 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதித்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 16 லட்சத்து 95 ஆயிரத்து 958ஆக அதிகரித்துள்ளது.

36,946 பேர் குணம்

கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரத்து 946 பேர் குணமடைந்த நிலையில் மொத்தமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே எட்டு லட்சத்து 57 ஆயிரத்து 467ஆக உள்ளன.

422 பேர் பலி

நேற்று (ஆக.01) மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 422 பேர் உயிரிழந்தனர். இதனையொட்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 24 ஆயிரத்து 773ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நேற்று (ஆக.01) மட்டும் 17 லட்சத்து ஆறாயிரத்து 598 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 47 கோடியே 22 லட்சத்து 23 ஆயிரத்து 639 தடுப்பூசி டோஸ்கள், பயனர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஒரேநாளில் 18 ஆயிரம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி - மாநகராட்சி

ABOUT THE AUTHOR

...view details