தமிழ்நாடு

tamil nadu

"அவளுக்கு வெரும் 11 ஆயிரம் டாலர் போதும்" இந்திய மாணவி மரணம் குறித்து அமெரிக்கா போலீஸ் கேலி பேச்சு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 12:51 PM IST

Updated : Sep 14, 2023, 2:12 PM IST

US Police viral video: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த விவகாரத்தில், விபத்தை ஏற்படுத்திய போலீஸ் அதிகாரி மற்றொரு போலீஸ் அதிகாரியிடம் கேலி செய்து பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

அமெரிக்கா: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த விவகாரத்தில், விபத்தை ஏற்படுத்திய போலீஸ் அதிகாரி கேலி செய்து பேசும் வீடியோ வெளியான நிலையில், அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்காவில் உள்ள இந்திய துணை தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவி விபத்தில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பல அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி போலீஸ் வாகனம் மோதிய விபத்தில் ஆந்திராவை சேர்ந்த மாணவி அமெரிக்காவில் உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், வாகனத்தை ஓட்டி வந்த கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனத்தை ஓட்டி கவனக்குறைவாக மாணவியின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.

அது மட்டும் இன்றி விபத்தை ஏற்படுத்திய உடன் அந்த போலீஸ் அதிகாரி, சியாட் காவல்துறை அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவர் டேனியல் ஆடரர் என்பவருக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு விபத்து குறித்தோ அல்லது மாணவி உயிரிழந்து விட்டாளே என்பது குறித்தோ கொஞ்சமும் கவலை கொள்ளாமல் கிண்டலாக பேசியுள்ளார். இது அவரின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ பதிவில் அவர், "அவ செத்துட்டா.. சாதாரணமான பொண்ணுதான்.. ஆமாம் ஒரு காசோலையை எழுதி வையுங்க.. பதினொன்றாயிரம் டாலர் போதும்.. அவளுக்கு அவ்வளவுதான் மதிப்பு"- என சிரித்துக்கொண்டே பேசியுள்ளார்.

இந்த தகவல் போலீஸ் உயர் அதிகாரிகளின் பார்வைக்கு சென்ற நிலையில் சம்பவம் குறித்து கூடுதல் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவியின் இறப்பு குறித்து கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம், கந்துலாவின் உயிரிழப்பு மிகவும் துயரமான நிகழ்வு எனவும், இவரின் உயிரிழப்புக்கு பின்னால் இருக்கும் அத்தனை பேரும் தண்டிக்கப்படும் வகையில் விசாரணைகள் தேவை எனவும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் சவுத் லேக் யூனியனில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் படித்து வந்தவர் ஆந்திராவை சேர்ந்த ஜாஹ்னவி கந்துலா. இவர் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி டெக்ஸ்டர் அவென்யூ சாலை வழியே நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையை கடக்க முயற்சி செய்த போது அதிவேகமாக வந்த போலீஸ் வாகனம் மோதி 100 மீட்டர் தூரம் அவர் தூக்கி வீசப்பட்டார்.

இதில் சம்பவ இடத்திலேயே அந்த மாணவி உயிரிழந்த நிலையில், இந்திய மாணவி அமெரிக்காவில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தி வைரலானது. இந்நிலையில், இது தொடர்பாக அமெரிக்கா காவல்துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இது தொடர்பாக அடுத்தடுத்து பல அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதையும் படிங்க:புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி!

Last Updated : Sep 14, 2023, 2:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details