தமிழ்நாடு

tamil nadu

IND VS AUS கிரிக்கெட் போட்டி; டிக்கெட் கவுன்ட்டர்களில் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு

By

Published : Sep 22, 2022, 8:26 PM IST

இந்- ஆஸி கிரிக்கெட் போட்டி; டிக்கெட் கவுண்டரில் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு
இந்- ஆஸி கிரிக்கெட் போட்டி; டிக்கெட் கவுண்டரில் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ()

ஹைதராபாத்தில் உள்ள உப்பல் மைதானத்தில் வரும் 25ஆம் தேதி நடக்க இருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் போட்டிக்கு டிக்கெட் வாங்க காத்திருந்த ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஜிம்கானா மைதானத்தில் வரும் செப்டம்பர் 25அன்று நடக்க இருக்கும் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்காக ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்தனர். இதனால் அங்கு அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் உண்டான தள்ளுமுள்ளுவில் 4 பேர் காயமடைந்தனர்.

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் வரும் செப்டம்பர் 25அன்று நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து இன்று (செப்-22) டிக்கெட் வாங்குவதற்காக ஜிம்கானா மைதானத்திற்கு ஏராளமானோர் வந்திருந்தனர்.

டிக்கெட் எடுப்பதற்காக ஏராளமானோர் காத்திருந்த நிலையில் டிக்கெட் வாங்க ஒருவரையொருவர் அடித்து முந்தி அடித்துக்கொண்டு சென்றதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தில் 20க்கும் மேற்பட்ட ரசிகர்கள் மயங்கி விழுந்தனர். 10க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மறுபுறம், ஜிம்கானா மைதானத்தில் டிக்கெட் விற்பனைக்காக நான்கு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. கவுன்ட்டர்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக, ஆன்லைனில் பணம் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதன் விளைவாக, டிக்கெட்டுகள் பணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே விற்கப்பட்டன.

டிக்கெட் விற்பனை விவகாரத்தில் ஹைதராபாத் கிரிக்கெட் கிளப் திட்டமில்லாமல் செயல்பட்டதாக ரசிகர்கள் பலரும் குற்றம்சாட்டினர்.

இதையும் படிங்க:IND Vs AUS முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: தோல்வியை தழுவிய இந்தியா

ABOUT THE AUTHOR

...view details