தமிழ்நாடு

tamil nadu

NFHS-5 : 14 மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள், சிறார்களுக்கு ரத்தசோகை

By

Published : Nov 25, 2021, 2:27 PM IST

National Family Health Survey , தேசிய குடும்ப சுகாதார ஆய்வு
NFHS-5 ()

நாட்டின் 14 மாநிலங்களில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5இன்(NFHS-5) இரண்டாம் கட்ட முடிவுகளை நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வினோத் குமார் பால், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆகியோர் வெளியிட்டனர்.

மக்கள் தொகை, மகப்பேறு, சிறார் சுகாதாரம், குடும்ப நலன், ஊட்டச்சத்து மற்றும் பிறவற்றுக்கான இந்தியா, இரண்டாம் கட்டத்திற்கு ஒருங்கிணைக்கப்பட்ட 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான முக்கிய குறியீடுகளின் இந்த அறிக்கையில் வெளியிடப்பட்டது.

இரண்டாம் கட்ட ஆய்வுக்கு அருணாச்சலப்பிரதேசம், சண்டிகர், சத்தீஸ்கர், ஹரியானா, ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், டெல்லி, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்த அறிக்கையின்படி, தேசிய அளவில் மொத்த கருத்தரித்தல் விகிதங்களில் ஒரு பெண்ணுக்கான குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை 2.2-லிருந்து 2.0 ஆக குறைந்துள்ளது.

அகில இந்திய அளவில் 12-23 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி இயக்கம் 62 விழுக்காட்டிலிருந்து 76 விழுக்காடு என மேம்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் மருத்துவமனையில் மகப்பேறு விகிதம் கணிசமாக 79 விழுக்காட்டிலிருந்து 89 விழுக்காடாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இது 100 விழுக்காடாக உள்ளது.

அதேவேளை, 14 மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:Meghalaya congress: 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேறி மம்தா கட்சியில் ஐக்கியம்

ABOUT THE AUTHOR

...view details