தமிழ்நாடு

tamil nadu

காதலை மறுத்ததால் காதலி சுட்டு கொலை- காதலன் கைது

By

Published : Mar 21, 2021, 12:47 PM IST

காதலை மறுத்து வேறு திருமணத்திற்கு தயாராகியாதால் பெண் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியது.

காதலி சுட்டுக் கொலை- காதலன் கைது
காதலி சுட்டுக் கொலை- காதலன் கைது

உத்திரப் பிரதேச நக்ல லல்மன் பகுதியில், நேற்று முந்தினம் மாலை பெண்ணின் சடலம் ஒன்று இருப்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்து, அருகில் உள்ள காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கியிருந்த உடலை மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ’’அப்பகுதியை சேர்ந்தவர் கல்பனா(21). இவர் அஜப் சிங் என்பவருடன் கடந்த 4 வருடமாக காதலித்து பழகி வந்துள்ளார். இந்நிலையில், கல்பனாவுக்கு வீட்டில் வேறோரு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பெண் அஜபிடம் உறவை முடித்துக்கொள்ள கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

பின்னர், அஜப் பெண்ணுக்கு பல முறை போன் செய்தும், பெண் அழைப்பை ஏற்காமல் மறுத்துள்ளார். தொடர்ந்து, பெண்ணை அருகில் உள்ள வயல் வெளிக்கு அழைத்துள்ளார். பின்னர், பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுள்ளார். ஆனால், பெண் மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அஜப் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு பெண்ணை சுட்டு வீழ்த்தியுள்ளார். இதையடுத்து, பெண்ணின் சடலத்தை கொண்டு, அவரது வீட்டின் அருகே 300 மீட்டர் உள்ள வயலில் வீசப்பட்டதாக அஜப் ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அஜப்பை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மீண்டும் தொடங்க உள்ள சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி

ABOUT THE AUTHOR

...view details