தமிழ்நாடு

tamil nadu

ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.60 கோடி கொடுத்தேன் - சுகேஷ் சந்திரசேகர்

By

Published : Dec 21, 2022, 10:08 AM IST

டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் ஆம் ஆம்தி கட்சிக்கு ரூ.60 கோடி கொடுத்தேன் என கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

டெல்லி:இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், ஆம் ஆத்மி கட்சி மீதும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் மீதும் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் பதவி கிடைக்கும் என்பதற்காக ரூ.50 கோடி கொடுத்ததாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரசேகர் செவ்வாய்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை முடிந்து வெளியே வந்த அவரிடம், ஆம் ஆத்மி கட்சிக்கு பணம் கொடுத்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.60 கோடி வழங்கியதாக மீண்டும் கூறினார். ஒரு உயர் அதிகாரம் கொண்ட குழு சுகேஷின் வாக்குமூலத்தை எடுத்து, தீவிரமான இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் அனந்த் மாலிக் வலியுறுத்தினார். எனவே இது தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி பாக்கி ரூ.1,200 கோடிதான்' - மத்திய நிதியமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details