தமிழ்நாடு

tamil nadu

உலகின் 2வது பெரிய பணக்காரர் ஆனார் அதானி

By

Published : Sep 16, 2022, 6:31 PM IST

Etv Bharatஉலகின் 2வது பணக்காரர் ஆனார் அதானி
Etv Bharatஉலகின் 2வது பணக்காரர் ஆனார் அதானி ()

பிரபல இந்திய தொழிலதிபரான கவுதம் அதானி லூயிஸ் உய்ட்டனின் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்கு தள்ளி உலகின் இரண்டாவது பணக்கரார் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

டெல்லி:இந்திய கோடீஸ்வரர் கவுதம் அதானி உலகின் இரண்டாம் பணக்காரர் ஆனார். இது குறித்து வெளியான ஃபோர்ப்ஸின் ரியல்-டைம் பில்லியனர்கள் பட்டியலின்படி, வணிக நிறுவனமான அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தற்போது லூயிஸ் உய்ட்டனின் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்குத் தள்ளி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக முன்னேறியுள்ளார்.

இந்த அறிக்கையை வெளியாகும் போது, ​​கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 153.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அர்னால்ட்டின் நிகர சொத்து மதிப்பு 153.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இரு மதிப்புகளையும் ஒப்பிடும்போது, ஃபோர்ப்ஸின் தரவுகளின்படி, அதானி தொழிலதிபர் எலோன் மஸ்க்கிற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.

எலோன் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 273.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதனைத் தொடர்ந்து இந்த பட்டியலில் இந்தியாவின் மற்றொரு தொழிலதிபர் முகேஷ் அம்பானி 91.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.

அதானி குழுமம் எரிசக்தி, துறைமுகங்கள், தளவாடங்கள், சுரங்கம், வளங்கள், எரிவாயு, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட 7 பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை கொண்டுள்ளது. அதானி குழுமத்தில் உள்ள ஏனைய நிறுவனங்களின் பங்குகளும் கணக்கெடுக்கப்பட்டு இந்த தரவரிசை பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் 2வது பெரிய பணக்காரர் ஆனார் அதானி

இதனிடையே அதானி குழுமம், கிராமப்புற இந்தியாவை மேம்படுத்தும் நோக்குடன் சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான தொண்டு நடவடிக்கைகளுக்கு ரூ.60,000 கோடி வழங்க முடிவு செய்துள்ளது. அதானி குழுமம் இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா குழுமத்திற்குப் பிறகு மூன்றாவது பெரிய நிறுவனமாகும்.

இதையும் படிங்க:உலகின் 3ஆவது பணக்காரர் கவுதம் அதானி

ABOUT THE AUTHOR

...view details