தமிழ்நாடு

tamil nadu

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை

By

Published : Jul 2, 2022, 5:57 PM IST

திருவனந்தபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

dead
dead

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் சாத்தன்பாறை பகுதியைச் சேர்ந்த மணிக்குட்டன் என்பவர், தனது வீட்டின் அருகே ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அண்மையில் சொந்தமாக வீடு ஒன்றையும் வாங்கியுள்ளார். இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மணிக்குட்டனின் ஹோட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சோதனை மேற்கொண்டனர். அப்போது, சுகாதார காரணங்களுக்காக ஹோட்டலை தற்காலிகமாக மூடியதாக தெரிகிறது.

இதனால் மணிக்குட்டன் இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனிடையே ஹோட்டலை திறப்பதற்கான ஏற்பாடுகளையயும் செய்துள்ளார். இந்நிலையில், ஹோட்டல் ஊழியர் மணிக்குட்டனை சந்திக்க வந்தபோது, அவரது வீடு நீண்ட நேரமாக உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதனால், சந்தேகமடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது மணிக்குட்டன் அறை ஒன்றில் தூக்கில் சடலமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவரது இரண்டு குழந்தைகள், மனைவி மற்றும் மனைவியின் தாயாரும் கீழே சடலமாக கிடந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மணிக்குட்டன் தவிர இறந்துபோன 4 பேரும் விஷம் குடித்து இறந்ததாக தெரியவந்துள்ளது. மேலும், கடன் தொல்லை காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பிகார்: மகளை பெற்றோரே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details