தமிழ்நாடு

tamil nadu

நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பெண் சிவிங்கிப்புலிக்கு உடல்நலக்கோளாறு

By

Published : Jan 27, 2023, 8:54 AM IST

நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பெண் சிவிங்கிப்புலிக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நமீபியா பெண் சீட்டாக்கு கிட்னி பிரச்னை.. விரைந்த மருத்துவக்குழு!
நமீபியா பெண் சீட்டாக்கு கிட்னி பிரச்னை.. விரைந்த மருத்துவக்குழு!

சியோபூர்:பிரதமர் நரேந்திர மோடி தனது 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்தாண்டு செப்டம்பர் 17ஆம் தேதி அன்று நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 8 சிவிங்கிப்புலிகளை மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் திறந்து வைத்தார். இந்த சிவிங்கிப்புலிகள் வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் ஷாஷா (Shasha) எனப் பெயரிடப்பட்டுள்ள பெண் சிவிங்கிப்புலிக்கு சிறுநீரக கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு டி-ஹைட்ரேஜன் உள்ளதும் தெரியவந்துள்ளது. ஆனால், இதற்கான சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் பூங்காவில் இல்லாததால், போபாலில் இருந்து மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதில் போபாலில் உள்ள வான் விஹார் தேசிய பூங்காவின் தலைமை கால்நடை மருத்துவர் அடுல் குப்தா, இந்திய வனவிலங்கு நிறுவன மருத்துவர்கள் மற்றும் 2 உள்ளூர் மருத்துவர்கள், குனோ தேசிய பூங்காவில் முகாமிட்டுள்ளனர். இவர்கள் பாதிக்கப்பட்ட ஷாஷா சிறுத்தைக்கு தேவையான சிகிச்சை அளித்து, தீவிரமாக கண்காணித்து வருவதாக கோட்ட வன அலுவலர் பிரகாஷ் குமார் வெர்மா கூறியுள்ளார்.

இதையும் படிங்க:கிரிப்டோகரன்சியில் லாபம் பார்க்கலாம்.. ரூ.3.13 லட்சம் இழந்த பொறியாளர்..

ABOUT THE AUTHOR

...view details