தமிழ்நாடு

tamil nadu

செல்போனில் ரகசியமாக பேசிய 16 வயது சிறுமி.. டேட்டா கேபிளால் கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை..

By

Published : Mar 20, 2023, 8:44 PM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆண் நண்பருடன் செல்போனில் பேசிய 16 வயது மகளை டேட்டா கேபிளால் கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டேட்டா கேபிளால் கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை
டேட்டா கேபிளால் கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை

கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ராவத்பூரை சேர்ந்த ஷியாம் பகதூர் என்பவர் தனது 16 வயது மகளை காதல் விவகாரம் தொடர்பாக டேட்டா கேபிளால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த கான்பூர் போலீசார் அவரை கைது செய்தனர். அதன் பின் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கான்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக கான்பூர் போலீசார் கூறுகையில், ராவத்பூரில் உள்ள ராதாபுரத்தில் ஷியாம் பகதூர் - சங்கீதா தம்பதி வசித்து வந்தனர். இவர்களது 16 வயது மகள் அர்ச்சனா வீட்டில் இருந்து வந்தார். இதனிடையே அர்ச்சனாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அர்ச்சனா அவருடன் செல்போனில் அடிக்கடி பேசுவதை வாடிக்கையாக வைத்து வந்தார்.

இதுகுறித்து அறிந்த ஷியாம் பகதூர் கோபமடைந்து, அர்ச்சனாவை அடித்தும், மிரட்டல் விடுத்தும் வந்துள்ளார். இதனால் ஷியாம் பகதூர் - சங்கீதா தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக சங்கீதா கோபித்து கொண்டு தனது தயார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதையும் படிங்க:சொத்து பிரச்சனை காரணமாக அண்ணனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த தங்கை கைது

இவருடன் அர்ச்சனா செல்ல வில்லை. தனது வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இவரை ஷியாம் பகதூர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் இன்று (மார்ச் 20) மதியம் குடிபோதையில் ஷியாம் பகதூர் வீட்டிற்கு வந்துள்ளார். அந்த நேரத்தில் அர்ச்சனா தனது ஆண் நண்பருடன் செல்போனில் ரகசியமாக பேசிக் கொண்டிருந்துள்ளார்.

இதைக்கண்டு ஆத்திரமடைந்த ஷியாம் பகதூர் ஸ்மார்ட்போன் டேட்டா கேபிளால் மகளின் கழுத்தை நெரித்துள்ளார். இதனால் அர்ச்சனா சுயநினைவை இழந்து கீழே சுருண்டு விழுந்தார். இதனிடையே கூச்சல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஷியாம் பகதூரின் மனைவி சங்கீதாவுக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் அடிப்படையில் வீட்டிற்கு விரைந்த சங்கீதா மகள் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அர்ச்சனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனிடையே போலீசாருக்கும் அண்டை வீட்டார் தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் சம்பவயிடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி ஷியாம் பகதூர் கொலை செய்திருப்பதை உறுதி செய்து கைது செய்தோம். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளோம் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ அதிரடி கைது

ABOUT THE AUTHOR

...view details