தமிழ்நாடு

tamil nadu

மத்திய அரசு அழைத்தால் பேச்சுவார்த்தை நடத்த தயார் - ராகேஷ் டிக்கைட்

By

Published : Apr 12, 2021, 6:48 AM IST

டெல்லி: மத்திய அரசு அழைத்தால், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.

Rakesh Tikait
ராகேஷ் டிக்கைட்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தலைநகரில் நான்கு மாதங்களுக்கு மேலாக உழவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். கடந்த நவம்பர் 27ஆம் தேதி தொடங்கப்பட்ட போராட்டம், தற்போதுவரை தொடர்கிறது.

இது குறித்து பேசிய விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட், "டெல்லியின் மூன்று எல்லைகளிலும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உழவர்கள் போராடிவருகின்றனர். ஜனவரி 22ஆம் தேதியன்று, பேச்சுவார்த்தை முடிவடைந்த அதே இடத்திலிருந்தே மீண்டும் தொடங்க வேண்டும்.

மத்திய அரசு, சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். எங்களின் போராட்டத்திற்கான கோரிக்கைகளும் மாறவில்லை. மூன்று வேளாம் சட்டங்களையும் ரத்துசெய்திட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

டெல்லி உழவர்கள் போராட்டம்

இதற்கிடையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், "நாட்டில் கரோனா இரண்டாவது அலை பரவல் தொடங்கியிருப்பதால் உழவர்கள் போராட்டத்தை ஒத்திவைத்துவிட்டு எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:கரோனா, வேலையிழப்பு, பொருளாதாரம்... - விளாசும் ராகுல் காந்தி!

ABOUT THE AUTHOR

...view details