தமிழ்நாடு

tamil nadu

இந்துக்கள் அல்லாதோர், 'சார்தாம் யாத்திரை'யில் பங்குகொள்ள தடை விதிக்க கோரிக்கை!

By

Published : Apr 10, 2022, 3:44 PM IST

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது தலைமையிலான அரசு இந்துத்துவா வளர்ச்சிக்காக செயல்படுவதை பாராட்டுவதாக தெரிவித்துள்ள விஷ்வ இந்து பரிஷத் தலைவி சாத்வி பிராச்சி, இந்துக்கள் அல்லாதோர் சார்தாம் யாத்திரையில் பங்குகொள்வதை தடை விதிக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

விஷ்வ இந்து பரிஷத் தலைவி சாத்வி பிராச்சி
விஷ்வ இந்து பரிஷத் தலைவி சாத்வி பிராச்சி

ஹரித்வார் (உத்தரகாண்ட்):விஷ்வ இந்து பரிஷத் தலைவி சாத்வி பிராச்சி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது தலைமையிலான அரசு இந்துத்துவா சித்தாந்த வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்பட்டு வருவதற்கு பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல உத்தரகாண்டில் உள்ள தாமி அரசும் இந்துத்துவா வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், உத்தரகாண்டில் தொடங்க உள்ள சார்தாம் யாத்திரையில் (Chardham Yatra) இந்துக்கள் மட்டும் பங்கேற்க வேண்டும். இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி அளிக்க கூடாது, தடை விதிக்க வேண்டும்.

விஷ்வ இந்து பரிஷத் தலைவி சாத்வி பிராச்சி

இதற்கு உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சார்தாம் யாத்திரை என்பது உத்தரகாண்டில் உள்ள நான்கு புனிய தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளவதாகும். சார்தாம் யாத்திரை மே 3ஆம் தேதி தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மானின் தமிழணங்கு ஓவியம் - அமித் ஷாவிற்கு அறைகூவல்!

ABOUT THE AUTHOR

...view details